Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 26 பிப்ரவரி (ஹி.ச.)
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அடுத்த கூகூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி
வரும் ராஜமனோகரன் (56).
பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடைபெறும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகள் மேல் கையை வைத்து பாலியல் தொல்லை
கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து,
அவர் இது தொடர்பாக மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் மாணவிகளிடம் தவறாக
நடந்து கொண்ட ஆசிரியர் ராஜமனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென
தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல்
நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் ராஜமனோகரன் மீது போலீசார்
போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam