ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு - வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!
பூஞ்ச்,26 பிப்ரவரி (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் வட்டார எல்லைப்புற கிராமம் ஒன்றில் தீவிரவாதிகளுடைய பதுங்கும் இடத்தை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் இருந்த இரண்டு வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் இன்னும் சில பொருட்களும் கைப்பற்றப
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு! - வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!


பூஞ்ச்,26 பிப்ரவரி (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் வட்டார எல்லைப்புற கிராமம் ஒன்றில் தீவிரவாதிகளுடைய பதுங்கும் இடத்தை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்தில் இருந்த இரண்டு வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் இன்னும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இது சம்பந்தமாக, ஜம்மு-காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ராணுவத்தின் படைப் பிரிவான ஒயிட் நைட் கார்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

மெந்தார் செக்டாரில் இருக்கும் கானி வனப்பகுதியின் அருகில் இருக்கின்ற சலானி காஸ்பலாரி கிராமத்தில் தீவிரவாதிகளின் மறைவிடம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், ராணுவமும், காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினரும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் விளைவாக, தீவிரவாதிகளுடைய பதுங்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து 4.5 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 800 கிராம் எடை கொண்ட சிறிய வெடிகுண்டு, இரண்டு சீன தயாரிப்பு கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு வெடிகுண்டுகளும், கையெறி குண்டுகளும் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் காரணமாக, பூஞ்ச் வட்டாரத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் செய்யும் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM