அரசு விழாவுக்குச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மாயம் - தாய் காவல் நிலையத்தில் புகார்!
தேனி, 26 பிப்ரவரி (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏ.மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் பிச்சையம்மாள் தனது மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தங்கபாண்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் தொடர்பான அ
Theni


தேனி, 26 பிப்ரவரி (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏ.மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் பிச்சையம்மாள் தனது மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தங்கபாண்டியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் தொடர்பான அரசு விழாவிற்கு திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவர், அவரது மனநிலை பாதிக்கப்பட்ட மகனை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் விழா முடிந்த பின்னர் இளைஞர் வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாய் பிச்சையம்மாள், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியிடம் தனது மகன் குறித்து கேட்டபோது, அவரிடம் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த தாய், தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN