விவசாயியை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவண்ணாமலை, 26 பிப்ரவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி வயது 60 இவருக்கும் பெருமாள், இருசப்பன் ஆகிய இருவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை ஊர் பொது மக்கள் சார்பில் பஞ்சா
Prison


திருவண்ணாமலை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி வயது 60 இவருக்கும் பெருமாள், இருசப்பன் ஆகிய இருவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது.

இது தொடர்பாக பலமுறை ஊர் பொது மக்கள் சார்பில் பஞ்சாயத்து பேசி உள்ளனர், ஆனால் நிலத்தகராறு தீராத பட்சத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முனுசாமி மற்றும் இருசப்பன் பெருமாள் ஆகியோருக்கான நிலத்தகராறு முற்றி கைகலப்பாக மாறி மோதல் ஆனது.

இதில் பெருமாள், இருசப்பன், முன்னாள் வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் கமலகண்ணன், மதியழகன், நந்தகோபால், சுதாகரன், துரைமுருகன் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து முனுசாமியை கட்டை மற்றும் அரிவாளால் கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த முனுசாமி வந்தவாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் (முன்ஜாமின் பெறவே) மீதமுள்ள ஆறு நபர்களை அனக்காவூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கானது திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதன் முன்னிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணை செய்ததில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், பெருமாள், இருசப்பன், மதியழகன், நந்தகோபால், சுதாகரன், துரைமுருகன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இவர்கள் ஏழு பேரையும் கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN