தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி
நாமக்கல், 26 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக வெற்றி கழகத்தில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் இவர்தான் வேட்பாளர் இவருக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி மாநில துணைப் பொதுச்
தவெக


நாமக்கல், 26 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகத்தில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில்

இவர்தான் வேட்பாளர் இவருக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை

துவங்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி ஓட்டு கேட்டு வருகிறார்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய மாநில நிர்வாகி தனக்கு தான்

எம்எல்ஏ சீட்டு எனக்கூறி தான் வேட்பாளர் எனக் கூறி சில நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

தேர்தல் வேட்பாளர் பிரச்சாரத்தை

துவங்கி மக்களிடையே ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கிராமப்புற பெண்கள்

நீங்கள் முதலில் எங்கள் ஊருக்கு ஏதாவது செய்யுங்கள் உங்களுக்கு நாங்கள்

ஓட்டுப் போடுகிறோம் எடுத்த உடனே ஓட்டு கேட்டு வராதீர்கள் எனக் கூறியதால்

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழகத்தினருக்கு முகம் சுளிப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்ததற்கு பிறகு வேட்பாளர்

பிரச்சாரம் செய்ய வேண்டும் என தலைமை உத்தரவு உள்ள நிலையில் தலைமைக் கழக

நிர்வாகிய ஒருவர் தற்பொழுது பிரச்சாரத்தை துவங்கி உள்ளது தமிழக வெற்றி

கழகத்தின் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam