அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து த.வெ.க தொடர்ந்த வழக்கு - தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும்
சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.) அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதுகுறித்தான விசாரணையில் தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர
TVK Protest


சென்னை, 26 பிப்ரவரி (ஹி.ச.)

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதுகுறித்தான விசாரணையில் தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது என த.வெ.க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது எனவும், நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன எனவும் த.வெ.க. தரப்பு தெரிவித்துள்ளது.

வழிகாட்டி வழிமுறைகள் த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிக்ள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பார்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர் என அரசுத்தரப்பு விளக்கமளித்தது

ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது எனவும்,பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது என அரசுத்தரப்பு விளக்கமளித்தது.

மேலும் சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் எனவும் அரசுத்தரப்பு குற்றம் சாட்டியது

கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது என்றும், வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் தமிழக 3 அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ