சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் - பொதுமக்கள் அச்சம்
கியால்ஷிங், 26 பிப்ரவரி (ஹி.ச.) சிக்கிம் மாநிலம் கியால்ஷிங் மாவட்டத்தில், இன்று (பிப்ரவரி 26) பிற்பகல் 11.24 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனைத்
சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் - பொதுமக்கள் அச்சம்


கியால்ஷிங், 26 பிப்ரவரி (ஹி.ச.)

சிக்கிம் மாநிலம் கியால்ஷிங் மாவட்டத்தில், இன்று

(பிப்ரவரி 26) பிற்பகல் 11.24 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதியம் 12.17 மணியளவில் தலைநகர் கேங்டாகிலிருந்து 11 கி.மீ. வடமேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b