Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-இல் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு வேலைகள் காரணமாக, கடந்த 20-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டன.
இதனால் கடந்த சில நாட்களாக பயணிகள் நிறைய சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தாம்பரம்-கடற்கரை இரண்டு மார்க்கத்திலும் கூடுதலாக 20 வேகமான மின்சார ரயில்கள் இன்றிலிருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம் பாதையில் பயணிகளின் வசதிக்காகவும், அதிக கூட்டத்தை குறைப்பதற்காகவும் கூடுதலாக 20 வேகமான மின்சார ரயில் சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த வேகமான மின்சார ரயில்களுக்கு மாம்பலம், கிண்டி, எழும்பூர் ஆகிய நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும் 1 மணி நேரத்தில் போய் சேரலாம்.
இந்த 20 வேகமான மின்சார ரயில்களுக்கான நேர அட்டவணையின் விவரம் பின்வருமாறு:-
கடற்கரை-தாம்பரம்:- காலை 7.50, 8.20, 9.20, 9.50, 10.15, மாலை 5.15, 5.30, 6.20, இரவு 7.10, 8.
தாம்பரம்-கடற்கரை:- காலை 7.40, 8.10, 9.10, 9.40, 10.05, 11.10, மதியம் 12, மாலை 6.05, 6.50, இரவு 7.35.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM