Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 27 பிப்ரவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பளையம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் உறுப்பினர்களாக இருந்தபோது அதிமுக கொடிக்கம்பம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க கடந்த சில மாதங்களுக்கு காவல்துறையினர் அரசியல் கட்சி கொடிகம்பங்களை அகற்றும்போது அதிமுக கொடிகம்பத்தை கட்சியினரே முன் வந்து கொடிகம்பத்தை கழற்றி சென்றனர் .
இந்த சூழலில் தான், கடந்த டிசம்பர் மாதம் நாகர்பாளையம் பகுதி அதிமுகவினர் பலர் தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றதில் அதிமுகவினர் கொடிம்பத்தின் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் தவெகவினர்.
இதில் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் அப்பகுதியில் தவெகவினர் அதிமுகவில் இருந்தபோது சொந்த செலவில் கொடிகம்பம் அமைக்கப்பட்டதால் கொடிகம்பத்தின் அடிபக்கத்திற்கு தவெகவினர் மஞ்சள் கலரை வண்ணம் அடித்து உள்ளனர்.
இதனையறிந்த அதிமுகவினர் அதிமுக கொடிகம்பத்தின் அடிபக்கத்தினை சேதப்படுத்தும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த திருக்குமார், பவளக்கொடி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையறிந்த தவெகவினர் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ள நிலையில் அகற்றப்பட்ட கொடிகம்பத்தின் அடிபக்கம் சேதப்படுத்துவது குறித்தும் கொடிகம்பம் அமைக்கப்பட்டவர்களுக்கு சொந்தமா அல்லது அதிமுகவினருக்கா சொந்தம் என்பது குறித்து சுமூக தீர்வு காண காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam