Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் (MEMU - Mainline Electric Multiple Unit) பணிகள், தடுப்பு வேலைகள் மற்றும் சிக்னல் மேம்பாடு பணிகள் காரணமாக சில நாட்களில் வழக்கமான நேர அட்டவணையில் இயங்காது அல்லது நேர மாற்றத்துடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மே 30 வரை அமலில் இருக்கும்.
தற்போது அரக்கோணம் - திருப்பதி இடையேயான இந்த மெமு சேவை காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
மார்ச் 1 முதல் ஏற்படும் மாற்றத்தால், சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது பகுதி தூரம் மட்டும் இயக்கப்படலாம். மாற்று ஏற்பாடுகளாக பிற ரயில்கள் அல்லது பேருந்து சேவைகளை பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்,
பயணிகளின் சிரமத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாற்றங்கள் குறித்த விவரங்கள் ரயில் நிலையங்களில் அறிவிப்புப் பலகைகள், IRCTC இணையதளம் மற்றும் 139 என்ற எண்ணில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் காரணமாக, திருப்பதி செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா போன்ற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயிலை நம்பியுள்ளனர்.
எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b