சென்னையில் தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 7 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் - 4 பேர் கைது
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நேற்று இரவு அடையாளம் தெரியாத சிறார்கள் மூன்றும் சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சந்தேகமடைந்து வாகன தி
Bike


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நேற்று இரவு அடையாளம் தெரியாத சிறார்கள் மூன்றும் சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சந்தேகமடைந்து வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த மூன்று சிறார்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிடிப்பட்ட சிறார்கள் மூவரும் சூளைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் 7, மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது .

தொடர் விசாரணையில் சிறார்கள் மூன்று பேரும் அண்ணாநகர், சூளைமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி சிறார்கள் திருடிய பைக்கில் பெட்ரோல் இருக்கும் வரை ஊர் சுற்றி விட்டு பெட்ரோல் தீர்ந்து உடன் இருச்சக்கர வாகனத்தை அதே பகுதியில் மறைவிடத்தில் வைத்து விட்டு அடுத்த இருசக்கர வாகனத்தை திருட்டி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் சிறார்கள் அளித்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து போலீசார் பிடிப்பட்ட சிறார்கள் 12 முதல் 14 வயது உடையவர்கள் என்பதால் அவர்களது பெற்றோரை அழைத்து இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதால் பிடிப்பட்ட மூன்று சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ