Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாதது பற்றி சுப்ரீம் கோர்ட் தானாகவே ஒரு வழக்கை விசாரித்தது.
போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யும்படி பார்த்துக்கொள்ளவும், கேமரா இல்லாத இடங்களில் கேமராக்களை பொருத்தவும் கோர்ட் உத்தரவிட்டது.
அதே போன்று, சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற புலனாய்வு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் கேமராக்களை வைக்க மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
எல்லா போலீஸ் நிலையத்திலும் முக்கியமான இடங்களான நுழைவு வாயில், வெளியேறும் இடம், பிரதான வாயில், லாக்கப் அறைகள், தாழ்வாரங்கள், லாபி, வரவேற்பு அறை மற்றும் லாக்கப் அறைக்கு வெளியிலும் கேமராக்கள் பொருத்தப்படுவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இரவிலும் ஆடியோ, வீடியோ பதிவாகும் வகையிலும், ஒரு வருடம் வரை பதிவுகளை சேமித்து வைக்கும் வகையிலும் கேமராக்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த் தேவ்,
'சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் சில மாநிலங்கள் வரவில்லை. அடுத்த கூட்டம் மார்ச் 14-ல் நடக்கிறது. அந்த கூட்டத்திற்கு பிறகு அறிக்கை கொடுக்கப்படும்.
என்றார்.
இதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை மார்ச் 23-க்கு தள்ளி வைத்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM