Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்ததில், 215 மருந்துகள் தரம் குறைவாகவும், 3 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து அந்த மருந்துகளை தயாரித்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதன் பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் எல்லா மருந்துகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. அதே போன்று, போலியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, சென்ற மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகளை சோதனை செய்தார்கள். அதில் காய்ச்சல், சளி, தொற்று, மற்றும் ஜீரண பாதிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 215 மருந்துகள் தரம் குறைவாகவும், 3 மருந்துகள் போலியாகவும் இருந்தன.
இதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் இந்த விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM