Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா மார்ச் ஐந்தாம் தேதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததும் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ