Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் CV சண்முகம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அவருக்கு தேவை பட்டால் எதிரி,நண்பர்,இல்லை என்றால் துரோகி.
பதவி கொடுத்தால் நண்பன் இல்லை என்றால் துரோகி.பச்சோந்தி போல நிறம் மாறும் நபர். இவர் அதிமுகவுக்கு பிடித்த சனி என நாங்கள் சொன்னோம்.
இவர் தானாக செயல்படவில்லை. ஒருவர் தூண்டல் பின்னணியில் மிக பெரிய சூழ்ச்சிகள் செய்து இந்த கட்சியை முடக்க திமுகவால் முடியாது என்பதை தெரிந்துகொண்ட அவர் உள் இருந்தே கொள்ளும் வியாதியாக.
எதிரியை விட துரோகி ஆபதானவன்.
கூடவே இருந்த நண்பன் துரோகியாக மாறினால் அவன் 1000 எதிரிக்கு சமம் என எண்ணி தேர்வு செய்யப்பட்ட நபர்தான் பன்னீர்செல்வம்.
அம்மா தொண்டன் என ஏமாற்றி முதல்வர் தொடங்கி இந்த இயக்கத்தின் ஒருங்கிணைபாளர் பதவி வரை வகித்தார்
இந்த இயக்கத்தை முடக்க திமுகவோடு இணைந்து சதி செய்தார்.
எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடை போட்டார்.அதிமுக செயல்படாமல் அவர் உள்ளே இருந்தே செய்தார்
எந்த இயக்கம் சேர்மன்,அமைச்சர் முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் என எந்த இயக்கம் பதவி கொடுத்ததோ அந்த கட்சியின் கோவில் போன்ற இந்த அலுவலகத்தை தன் காலால் எட்டி உதைத்து செய்த பாவத்தால் இந்த கட்சியில் இருந்து பொதுகுழுவால் தீர்மானம் நிறைவேற்றி வெளியேற்றியது.
அழுதார்,நியாயஷ்தான் போல பதவி வேண்டாம் எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என நாடகம் போட்டார்.
நாங்கள் சொன்னது இன்று உண்மையாகி விட்டது.
அதிமுகவுக்கு இன்று தான் பொங்கல் தீபாவளி. எங்களை கொஞ்ச நஞ்சம் பிடித்த சனி இன்றோடு விட்டது.
1972 ஆம் ஆண்டு கட்சி தொடங்கியது முதல் எம். ஜி.ஆர் முதல் கடைசி தொண்டன் வரை தீய சக்தி என்ற வார்த்தையை சொல்வார்கள் இன்று அவர் ஒரு பச்சை பொய்யை சொல்கிறார்
தேனி மாவட்டத்தில் ஓட்டை என்று சொன்னதற்கு பதில்.
இவர் துணை முதல்வராக இருந்த நேரத்தில் தான் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தது என்று அவர் பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ