Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே பொதுச்செயலாளர் பதவி தொடர்பான அதிகாரப் போட்டி காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கடும் பிளவு ஏற்பட்டது.
ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பாஜக ஆதரவை நம்பி அரசியல் பயணத்தை தொடர்ந்த அவர், பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தேசிய அளவிலான தலைவர்களை சந்திக்க முயன்றும், அதிமுகவில் மீண்டும் இடம் பெற முயன்றும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்காததால் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலை உருவானது.
இந்த சூழ்நிலையில், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்த அரசியல் முடிவை எடுக்க தயாராக இருப்பதாகவும், தற்போது அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டது தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 8 மணி முதல் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்கள் தி நகர் நட்சத்திர விடுதியிலும் சென்னை தேனாம்பேட்டில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் காத்துக் கொண்டிருந்தனர்.
சென்னை தி நகர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து அவரை அறிவாலயம் அழைத்துச் சென்றார்.
உடன் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் , உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் சென்றனர்.
அறிவாலயம் வந்திருந்த ஓ.பி.எஸ்.ஐ -அமைச்சர்கள் ஏவா வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளே அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் உள்ளே சென்ற ஓபிஎஸ் திமுகவின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ