ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 4,000 கன அடியாக உயர்வு
தர்மபுரி, 27 பிப்ரவரி (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி, கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) நீர்வரத்து 700
Hogenakkal rises to 4,000 cubic feet


தர்மபுரி, 27 பிப்ரவரி (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி, கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) நீர்வரத்து 700 அடியாக இருந்தது.

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் வறண்டும், ஆற்றில் ஆங்காங்கே நீர் குட்டைகள் தோன்றி பாறை திட்டுக்களாக காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடி வரை சரிந்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து இந்த நீர்வரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b