இன்று மாலை கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா தொடக்கம்
ராமநாதபுரம், 27 பிப்ரவரி (ஹி.ச.) இலங்கை, இந்தியா இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பக்தர்களும் இந்தியாவில் இருந
Katchadheevu


ராமநாதபுரம், 27 பிப்ரவரி (ஹி.ச.)

இலங்கை, இந்தியா இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பக்தர்களும் இந்தியாவில் இருந்து பக்தர்களும் பங்கேற்க உள்ளனர்.

இன்று பிப்ரவரி 27 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட உள்ளது.

இந்நிலையில் 26 நாட்டுப் படகுகளும் 92 விசை படகுகளில் 3000துக்கும் மேற்பட்ட பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய பக்தர்களை மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத்துரை அதிகாரிகள், கடலோர காவல் குழுமம் போலீசார் கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பக்தர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதித்து வருவது மட்டுமல்லாது கட்சதீவு திருவிழாவுக்கு செல்ல பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN