பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பில் திருப்பரங்குன்றம்..!
மதுரை, 27 பிப்ரவரி (ஹி.ச.) மார்ச் 1 ஆம் தேதி பாரத பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்து அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4.05 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்
மோடி


மதுரை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

மார்ச் 1 ஆம் தேதி பாரத பிரதமர் மோடி தனி விமானம் மூலம்

மதுரை விமான நிலையம் வந்து அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4.05 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி திருப்பரங்குன்றம் கோவிலை சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில் நுழைவாயிலில் இருந்து கருவறை வரை உள்ள 12 உண்டியலை அகற்றம் செய்ய சிறப்பு குழு படை கூறியதன் பேரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் சிறப்பு அனுமதி பெற்று, திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் மதுரை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையார் பிரதிபா முன்னிலையில் ஆய்வாளர்கள் இளவரசி கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், சுமதி, உதவி பாதுகாப்பு அலுவலர் வேலுச்சாமி மற்றும் கோயில் பணியாளர்கள் திருக்கோயில் பக்தர்கள் பேரவை பள்ளி மாணவிகள் ஆகியோர் கலந்து உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் பின்பு அந்த 12 உண்டியல் அகற்றப்படும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் திருப்பரங்குன்றம் கோவிலில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கோயில் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தவற்கு கும்பமரியாதை செய்வதற்கு தயார் செய்யப்பட்டு கும்பம் உற்சவர் சுவாமி முன்பு வைக்கப்பட்டுள்ளது.

கொடி மரத்தின் அருகே அவர் அமர்வதற்கான சிறப்பு சிம்மாசனத்தையும் கோவில் நிர்வாகம் தயார் செய்துள்ளது. அந்த சிம்மாசனத்தை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் அரியலூர் நாகப்பட்டினம் வேலூர் உள்ளிட்ட 20 வெடிகுண்டு தடுப்பு நிபுணர் குழுவினர்கள் மோப்ப நாய் உதவியுடன் திருப்பரங்குன்றம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மேலரத வீதி கீழரதவீதி 16 மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவிதி முழுவதும் சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயில் முழுவதும் மதுரை வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் சோதனை செய்த பின்பு அங்கு சோதனை செய்த இடத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அடையாளம் செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு எந்த வழியில் பிரதமர் வருகிறார் என அதற்கான பாதுகாப்பு ஆய்வு பணியையும் கேட்டறிந்து புறப்பட்டு சென்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam