Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
இது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில்,
ஒரு துரோகத்தின் வரலாறு
பதவிக்காய்ப் பாய்ந்தோடும் கால்கள்,
பயணித்த பாதையை மறந்து போனதே!
பதினாறு ஆண்டுகள் நிழலில் வளர்ந்தவர்
பகைவனின் மடியில் இன்று தஞ்சமானாரோ!
நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை அறுக்கும் விந்தை!
கொள்கையை விற்றுப் பிழைக்கும் வித்தை!
அண்ணா திமுகவின் இரத்தம் குடித்த
அட்டைப்பூச்சி!
முகவரி தந்தது இரட்டை இலை;
முடிசூட்டியது இரட்டை இலை;
பாலைக் குடித்துவிட்டு விஷத்தைக்
கக்கும் பாம்பே! பாவ மூட்டையே!
எதிர்த்து நின்ற கால்கள் - இன்று
எதிரியின் காலை நக்கிப் பிழைப்பதா?
மானம் பெரிதென்று வாழ்ந்த இயக்கம் விட்டு-
ஈனம் சுமந்து சென்றால் இனி எங்குண்டு உன் முகவரி?
பச்சைப்பாம்பு என்று எண்ணினோம்.
படமெடுத்தாடும் விஷப்பாம்பு எனப் புரிந்தோம்.
நிழலே துணைக்கு வராத நீயெல்லாம் தலைவனா?
கல்லறைக்குப் போனாலும் அந்தக் கல் கூட உன்னைக் காறித்துப்பும்!
துரோகம் என்றால் இனி எட்டப்பன் பெயர் அழிக்கப்பட்டு உன் பெயரே
உச்சரிக்கப்படும்!
சருகுகள் உதிர்வதால் கிளைகள் சாவதில்லை!
சரித்திர நாயகர்கள் தடம் மாறுவதில்லை! அவர்கள் செத்தாலும்
வாழ்பவர்கள்!
நீயெல்லாம் இருந்தாலும் செத்தவனே!
ஆயிரம் உயிர்கள் குருதி சிந்தி வளர்த்த கோட்டை அண்ணா திமுக.
அதற்கு அழிவே இல்லை!
துரோகத்தின் எச்சங்கள் விலகிய பின்னும்-
தூய தங்கமாய் மின்னும் இந்தக் கழகம்!
என்று பதிவிட்டு இருக்கிறார்.
Hindusthan Samachar / ANANDHAN