ஓ.பி.எஸ் சென்றது திமுகவிற்கு பலவீனம் அண்ணா திமுகவிற்கு பலம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தமிழ்நாடு, 27 பிப்ரவரி (ஹி.ச.) வருகிற ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது. இதில்,பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், ஜி கே வாசன் உள்ளிட்டவர் கலந்து கொள்ள உள
ஆர் பி உதயகுமார்


தமிழ்நாடு, 27 பிப்ரவரி (ஹி.ச.)

வருகிற ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது.

இதில்,பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எடப்பாடி

பழனிச்சாமி, டிடிவி தினகரன், ஜி கே வாசன் உள்ளிட்டவர் கலந்து கொள்ள உள்ளனர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்று

எதிர் பார்க்கப்படும் சூழலில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான

குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 3000 -க்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தின் போது

பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அவர்களுக்கான

ஆலோசனைக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து

கூறுகையில்:

ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இந்தக் கூட்டம் அமையும்.

வரக்கூடியவர்களுக்கு காவல்துறையினருடன் சேவை செய்வதற்காக குடிநீர் கழிப்பறை

மருத்துவ வசதி உள்ளிட்ட அதற்கான வழிகாட்டுதலுக்காக 2500க்கு மேல் தூதுவராக

அம்மா பேரவை சார்பாக பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் தெரிவித்ததாவது,

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு:

புரட்சித் தலைவர், தலைவி தொடர்ந்து பல சவால்களுக்கு மத்தியில் அதிமுகவை எடப்பாடி யார் வழி நடத்தி வருகிறார் அவரை ஏற்றுக் கொண்டு இரண்டரை கோடி

தொண்டர்களும் இட்டு கோடி தமிழர்களும் வரவேற்றுள்ளனர்.

ஒரு சிலருக்கு கருத்து

வேறுபாடு காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர் அப்படி நான் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் முகாம் மாரி சென்று இருக்கிறார்கள். அதை

பற்றி கவலைப்பட மாட்டோம்.

புரட்சித்தலைவர் காலத்திலும் அம்மா காலத்திலும் வேறு முகம்களுக்கு செல்வது

தேர்தல் காலத்தில் வேறு இடங்களுக்கு போவதும் வருவதும் நடக்கும் மக்கள் அவற்றை பொருட்படுத்த மாட்டார்கள்.

இந்திய மக்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியை உலக நாடுகள் அங்கீகரித்து

இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் பரப்புரையை திசை திருப்புவதற்காகவும் மடை மாற்றம்

செய்வதற்காகவும் இது போன்ற வேலைகளை செய்கிறார்கள்.

ஏற்கனவே அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் என்று சொல்லி குழப்பமான நிலையை தான் தமிழக மக்களுக்கு

செய்தியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

என்றால் எடப்பாடி யாரின் ஒப்புதல் வாக்கு மூலமாகத்தான் மகாபாரதம் நடவடிக்கையாக

பார்க்கிறோம் இதனால் எந்த விளைவும் தாக்கமும் ஏற்படாது.

பத்தாயிரம் உதவித்தொகை மற்றும் இளைஞர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்கிற

அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவருக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியை சாமானியங்களுக்கு

கிடைக்கக்கூடிய திட்டம் எய்ம்ஸ்.

அதிமுகவுக்கு உரிமைக்கோரியவர்கள் இப்போது எடப்பாடி பழனிச்சாமி தான் என புகழ்

வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

இனி நீதிமன்றம், மக்கள் மன்றம் என்று புரளிகளுக்கு வேலை இல்லை. இது ஒரு

முற்றுப்புள்ளி இது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் கொண்டாட்டம்.

குடியுரிமை சட்டம் அமல்படுத்தி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது யாருக்கும் எதுவும்

பாதிப்பு உள்ளதாக 100 நாள் வேலை திட்டம் நாட்கள் உயர்த்தப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கு நாங்கள் கோரிக்கை வைக்கலாம்.

மதுரை எய்ம்ஸ் நாங்கள் கால அவகாசம் என்று சொல்கிறோம் நீங்கள் காலதாமதம் என்று

சொல்கிறீர்கள். திட்டம் பயனுள்ளது. நீங்கள் செங்கலை தூக்கி அலையலாம் ஆனால்

செங்கோல் எடப்பாடியாருக்கு தான்.

திமுகவின் சர்வாதிகார, கொடுங்கோல், மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுத நினைக்கும்

கட்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது.

பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் பாச ஆகிடுவேன் என்று சொல்வார் அதேபோல விஜய் சொல்கிறார்.

ஓபிஎஸ் எல்லா பதவியையும் இங்கு அனுபவித்து விட்டார். அமைச்சர் அவையில் பல

பொறுப்புகள் வகுத்துள்ளார்.

ஓபிஎஸ்ஐ அங்கு முதலமைச்சராக அறிவிப்பார்களா, அண்ணா திமுகவில் சாமானியனை

முதல்வராக அறிவிப்பார்கள்.

ஓபிஎஸ் சென்றது திமுகவிற்கு பலவீனம் அண்ணா திமுகவிற்கு பலம் என கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam