திமுகவில் ஓபிஎஸ் ஐக்கியம் -திருமாவளவன் கருத்து..!
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்ததன் மூலம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டண
திருமாவளவன்


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்ததன் மூலம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்து இருப்பதாக நம்புவதாக கூறினார்.

மேலும், ஓபிஎஸ்சை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர் ஜெயலலிதா அம்மையாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர், அதிமுகவை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக இயங்கச் செய்ய வேண்டும் என ஆர்வம் என ஓபிஎஸ் குறித்து திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.

அதிமுகவை ஒருங்கிணைக்கும் அவரது முயற்சி அங்கு வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அவர் பாஜக போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் தன்னை ஒரு திராவிட பாசறையில் இணைத்து கொண்டார் என்பது அவர் மீதான நன் மதிப்பை நண்பகத் தன்மையை உயர்த்துகிறது என்றார்.

பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறார் பாஜக சொல்லுவது படி செயல்படுகிறார் என்கின்ற விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது இருந்தன.

ஆனால் இன்றைக்கு அவர் எடுத்திருக்கின்ற இந்த முடிவு அவர் நிதானமானவர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழியில் வந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைக்கு திமுக என்கின்ற ஒரு திராவிட இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு திமுகவை மட்டும் அல்லாமல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியையும் வலிமைப்படுத்தி உள்ளார் என்கின்ற வகையில் தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam