Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் விவசாயத்திற்கும் குடியிருக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 25ஆம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட குவாரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் அந்த குவாரி இன்று செயல்பட்ட நிலையில்,இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற முதியவர் அந்த குவாரிக்கு சென்று அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த குவாரியின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட முதியவர் செல்வகுமார் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது,காரில் இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த செல்வகுமார் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
குவாரிக்கு எதிராக தட்டிக் கேட்டதால் செல்வகுமாரை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பெனட் அளித்துள்ள விளக்கத்தில்,
தங்கள் கல்குவாரி முறையான அனுமதி பெற்று கடந்த 27 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவதாகவும்,பட்டா இடத்தில் தான் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு குவாரி நடந்து வருவதாகவும்,சிலர் திட்டமிட்டு வேண்டுமென்று அடிக்கடி பணம் பறிப்பதற்காக பிரச்சனை செய்வதாகவும்,அதேபோல் செல்வகுமார் என்பவரும் இன்று காலை தான் குவாரிக்கு வந்த போது மது போதையில் தனது வாகனத்தை மறித்து பிரச்சனையில் ஈடுபட்டதாகவும்,தான் அவரிடமிருந்து ஒதுங்கி வந்த நிலையில் தற்போது தவறான குற்றச்சாட்டை அவர்கள் முன் வைக்கிறார்கள் என்றும் இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam