பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு - இராமதாஸ் வாபஸ்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் பாமக நிறுவனர் ராமதாஸ். உரிமையியல் நீதிமன்றத்தை அ
Anbumani


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று வழக்கு வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடந்த 2025 ஜூலை மாதம் கடிதம் அனுப்பியிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்து தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ராமதாஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது.

Hindusthan Samachar / P YUVARAJ