Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை, ஆளுங்கட்சியான திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நடத்தி வருகிறது.
இது வரை முஸ்லிம் லீக், மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று (பிப்ரவரி 27) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இன்று (பிப்ரவரி27) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவால் அக்கட்சி துக்கம் அனுசரித்து வருகிறது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு இன்று பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது.
திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ளது.
நாளை (பிப்ரவரி 29) சென்னை அறிவாலயத்தில் இந்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கலந்துகொண்டு தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்க உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b