ஸ்ரீவில்லிப்புத்தூர் - மதுரை அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக வதந்தி - அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இது குறித்து தமிழக அரசின்
ஸ்ரீவில்லிப்புத்தூர் - மதுரை அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக வதந்தி - அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

இது குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்தே 75 ரூபாய்.

அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. அப்பேருந்திற்கு திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு G.O Ms 48 நாள் 28.01.2018 -ன்படி குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.

சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை' என்று மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b