தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் எதிர்பாராத விதமாக மூடப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி
தூத்துக்குடி, 27 பிப்ரவரி (ஹி.ச.) தூத்துக்குடி மாநகரின் முக்கியமான பகுதியான 1-வது ரயில்வே கேட் நேற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் உட்பட பொது மக்கள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். ரயில்வே கேட்டிலுள்ள தானியங்கி கத
தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் எதிர்பாராத விதமாக மூடப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி


தூத்துக்குடி, 27 பிப்ரவரி (ஹி.ச.)

தூத்துக்குடி மாநகரின் முக்கியமான பகுதியான 1-வது ரயில்வே கேட் நேற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் உட்பட பொது மக்கள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானார்கள்.

ரயில்வே கேட்டிலுள்ள தானியங்கி கதவு திடீரென இயங்காததே இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியாத நிலை உருவானது.

தகவல் அறிந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பழுதான தானியங்கி கதவைச் சரிசெய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

முக்கியமான சாலை என்பதால், கேட் மூடப்பட்ட காரணத்தினால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

மாற்றுப் பாதை குறித்த சரியான தகவல் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், அவசர மருத்துவ உதவிக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

இந்த வேலைகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM