திருப்போரூர் முருகன் கோவில் மாசி பிரம்மோற்சவம் தேர் திருவிழா
செங்கல்பட்டு, 27 பிப்ரவரி (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் தலமாக விளங்கும் கந்தசுவாமி திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தி
முருகன் கோயில்


செங்கல்பட்டு, 27 பிப்ரவரி (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம்,

திருப்போரூரில் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் தலமாக விளங்கும் கந்தசுவாமி திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்,

இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 21ம் தேதி, தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் முருகப்பெருமானுக்கு காலை மாலை இருவேளைகளும் சிறப்பு ஆராதனை அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று ஏழாம் நாள் திருதேரோட்டம் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச் வருகின்றனர்.

திருத்தேர்விழா வையொட்டி நான்கு மாட வீதிகளிலும் வழி எங்கும் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

திருத்தேர் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருப்போரூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam