Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 பிப்ரவரி (ஹி.ச.)
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் இயங்கி வரும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிறுவனத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் இன்று சேலம் வருகிறார்.
காலை 10.25 மணிக்கு விமானம் மூலம் காமலாபுரம் வரும் அவர் பின்னர் கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்திற்கு வருகிறார்.
அங்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b