மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் பூஜை நேரங்களில் மாற்றம்
தூத்துக்குடி, 27 பிப்ரவரி (ஹி.ச.) தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புராதன சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலான அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 03.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நிகழவிருக்கும் ச
மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு  தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர்  கோவில் பூஜை நேரங்களில் மாற்றம்


தூத்துக்குடி, 27 பிப்ரவரி (ஹி.ச.)

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புராதன சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலான அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 03.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோயிலின் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அன்று மதியம் 03:20 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, மாலை 05:00 மணிக்கு மத்திய காலத்தையும், மாலை 06:48 மணிக்கு நிறைவையும் அடைகிறது. இதன் காரணமாக, மதிய பூஜைகள் முடிந்தவுடன் பகல் 12:00 மணிக்கு கோயிலின் நடை சாத்தப்படும்.

பின்னர் கிரகண காலம் முடிந்து, இரவு 07:30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து சாயரட்சை மற்றும் அர்த்த சாம பூஜைகள் முறைப்படி நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b