கோழிக்கோட்டில் உள்ள ராமநாட்டுக்கராவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி
கோழிக்கோடு, 28 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம்,கோழிக்கோடு ராமநாட்டுக்கரா மாடர்ன் பஜாரில், இருந்து ஃபெரோக் நோக்கி அதிகாலை 3.25 மணிக்கு சென்ற கார், மலபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு ப
இன்றுஅதிகாலை கோழிக்கோட்டில் உள்ள ராமநாட்டுக்கராவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் நான்கு பேர் பலி


கோழிக்கோடு, 28 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம்,கோழிக்கோடு ராமநாட்டுக்கரா மாடர்ன் பஜாரில், இருந்து ஃபெரோக் நோக்கி அதிகாலை 3.25 மணிக்கு சென்ற கார், மலபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.ஒருவர் காயமடைந்தார்.

உயிரிழந்தவர்கள் ராமநாட்டுக்கராவைச் சேர்ந்த தினில், ஃபெரோக்-ஃபாரூக் கல்லூரி பகுதியைச் சேர்ந்த அஜீஷ், விமல் மற்றும் ஷ்யாம்லால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,பந்தீரங்காவைச் சேர்ந்த திஜில்காயம் அடைந்துள்ளார், அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மீஞ்சந்தா நிலைய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்ததாவது,

விபத்து நடந்த சிறிது நேரத்தில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது,முதலில் உள்ளூர்வாசிகள் முதலில் ஒருவரை வெளியே எடுத்தனர்.

மற்ற பயணிகள் சேதமடைந்த காருக்குள் சிக்கியிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் கட்டர்களை வைத்து காரை வெட்டி அவர்களை மீட்டனர்.

ஐந்து பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

ஆனால், 4 பேர் காயங்களுடன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த இளைஞர்கள் ஒரு திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மோட்டார் வாகனத் துறையும் தனியாக விசாரணை செய்ய உள்ளது.

உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM