Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசியபோது,
ஓ. பன்னீர்செல்வம் அமைப்பில் மாவட்ட செயலாளர்களாக இருந்த 47 பேர் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளனர். விரைவில் எனது தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைய உள்ளனர்.
இவ்வளவு நாள் ஓ.பன்னீர் செல்வம் உடன் இருந்துவிட்டு இப்போது வந்து அவரை நான் குறை கூறினால் இவ்வளவு நாள் அவருடன் நான் பொய்யாக இருந்தது போல் ஆகிவிடும் ...எனவே அவர் குறித்து நான் இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஆனால் ஜெ. படத்தையோ , கரை வேட்டியையோ என்னால் எப்போதும் மாற்ற முடியாது. இதை ஓபிஎஸ் சிடம் சில நாட்களுக்கு முன்பே நான் கூறி விட்டேன்.
ஓ.பன்னீர் செல்வத்துக்கு நான் எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும் இன்றில் இருந்து எனது கடைசி காலம் வரை நான் அதிமுகவில்தான் தான் பயணிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ