Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த அஞ்சலை, பொற்கொடி தவிர்த்து எஞ்சிய அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார் என்ற நூர், விக்னேஷ், ராஜேஷ், கோபி, குமார் என்ற செந்தில்குமார் ஆகிய 12 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீ்னை ரத்து செய்து நீதிபதி கே.ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 12 பேரும் மார்ச் 6 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தி்ல் சரணடையவும் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN