திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர், 28 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வந்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் முருகம்பாள
Tiruppur Court


திருப்பூர், 28 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வந்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வந்த வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த எஸ்.எம். முஸ்தப்பா அல் அமின் (35), ஜாஸ் கஞ்சகான் அலி (27), முகமது மொனிருள் இஸ்லாம் (35) ஆகிய மூவரையும் வீரபாண்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்தது.

வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஸ்ரீதர், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு சட்டவிரோதமாக வெளிநாட்டு நபர்கள் தங்கி வேலை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக முக்கியத்துவம் பெறுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN