Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 28 பிப்ரவரி (ஹி.ச.)
ஈரோடு, தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விஸ்வநாதன் என்பவரின் 15 வயது மகள் கனியா, அரசு பள்ளியில் 11.ம் வகுப்பு பயின்று வந்தார்.
நேற்று மாலை தனது வீட்டில் நடந்து சென்ற போது, 3 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து கனியா மீது விழுந்துள்ளது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமியை உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுமி கனியா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam