தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து, பெண்ணின் கழுத்தில்  இருந்த தங்க சங்கிலியைப் பறித்து சென்ற கொள்ளையர்கள்
தெலங்கானா, 28 பிப்ரவரி (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் ஜட்செர்லா நகரில் கிஷ்டாரெட்டி நகர் காலனியில் உள்ள ஒரு மல்லிகை கடை அருகே மூன்று நபர்கள் வந்தனர். இருவர் பைக் மீது அமர்ந்திருக்க, மூன்றாவது நபர் கடைக்குச் சென்றார். தண்ணீர் பாட்டில் வாங்குவது போ
கொள்ளை


தெலங்கானா, 28 பிப்ரவரி (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் ஜட்செர்லா நகரில் கிஷ்டாரெட்டி நகர் காலனியில் உள்ள ஒரு மல்லிகை கடை அருகே

மூன்று நபர்கள் வந்தனர்.

இருவர் பைக் மீது அமர்ந்திருக்க, மூன்றாவது நபர் கடைக்குச் சென்றார். தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து, கடையில் இருந்த

மஞ்சுளா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 25 சவரன் எடையுள்ள தங்க சங்கிலியைப்

பறித்தார்.

பின்னர் வேகமாக பைக் ஏறி மூவரும் தப்பினர். இந்த சம்பவம் முழுவதும்

சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam