Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை பெரம்பூரில் 1200 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசர கால வெளியேறும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகை பயிற்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஐபிஎஸ் சீமா அகர்வால் மற்றும் இணை இயக்குனர் சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சியின் போது அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்படும்போது சுயநினைவு இன்றி மற்றும் சுயநினைவோடு இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்றும், ரோப் கவர் மூலம் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது என்றும், ஒருவர் ஆபத்தான முறையில் உயிருக்கு போராடும் போது எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிடவும் முதன்மையாகக் கொண்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
அதன் பின்னர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் செய்தியாளர்களை சந்தித்த போது,
தீ விபத்து நேரங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரோப் மூலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான ஒத்திகை காண்பிக்கப்பட்டது.
மேலும், தீ விபத்தின் போது சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் சுயநினைவுடன் இருப்பவர்களை எவ்வாறு மீட்பது என்பதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. குடியிருப்பு வாசிகள் அதிகம் இருப்பதால், உண்மையான தீ விபத்து போல ஏற்படுத்தாமல், புகை மட்டும் ஏற்படுத்தி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 120 காவல் நிலைய கேடர்ஸ் பயிற்சியில் பங்கேற்றனர். தீ விபத்து நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக தங்களது பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதும், டிஜிபி பதவி குறித்து எதிர்பார்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு,
தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன் என சீமா அகர்வால் பதிலளித்தார்.
தீயணைப்புத் துறையில் தேவையான உபகரணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு,
அனைத்து நிலையங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்றார்.
பல தீயணைப்பு நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக,
600 தீயணைப்பு வீரர்கள் பணிநியமன முடிவுக்காக காத்திருக்கின்றனர். சிலர் பணி ஓய்வு பெறுவதாலும், சிலர் உயர்பதவிக்கு செல்வதாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 பேர் பணியில் சேர்க்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
சமீபத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும், இதுவரை 10,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அடுத்த வாரம் முதல் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலிருந்தும் இரண்டு பள்ளிகள் தேர்வு செய்து பயிற்சி வழங்கப்படும். தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மகளிர் பள்ளிகளில் தீயணைப்பு பாதுகாப்பு பெட்டிகள் இல்லை என்ற கேள்விக்கு,
அப்படி இருந்தால் தகவல் அளியுங்கள், தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருகிறோம் என சீமா அகர்வால் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ