அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளனர் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரண
High court


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தனியார் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் அதற்கு சாதகமாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2021-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

1,421 நாட்கள் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்கவேண்டும் என சென்னை மாநகராட்சி மனுவில் தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு அக்டோபர் 7ந் தேதி பிறப்பித்த தீர்ப்பு நகல் அலுவலகத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே மேல் முறையீடு செய்ய கால தாமதம் என சென்னை மாநகராட்சி மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்கும் இந்த மனுவை ஏற்கமுடியாது தள்ளுபடி செய்யப்படுகிறது என தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது.

காலதாமதத்துக்கு அதிகாரிகளின் அலட்சியம் அல்லது எதிர்தரப்பினரோடு உடந்தை தான் காரணம் எனவும் நீதிபதிகள் கூறினர்

இந்த தீர்ப்பு நகலை தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ