தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - த.வா.க பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் ப
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதுவரை முஸ்லிம் லீக், மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b