Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அந்தந்த மாநிலங்களில் கூட்டணிப் பேச்சு, தொகுதிகளைப் பிரிப்பது, விருப்ப மனு வாங்குவது என்று தேர்தல் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் அசாம் சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக நேற்று மாலை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், அசாமில் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
அதன்படி அசாம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
தேர்தல் அறிவிப்பு வந்ததும் காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM