திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் விளம்பர பலகை சேதம் - தேடிச் சென்ற போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
கேரளா, 28 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகரத்தின் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளம்பர பலகை அமைக்கப்பட்டு இருந்தது அந்த விளம்பர பலகையை சேதப்படுத்தியதாக கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான வாலிபர் சங்கத்தினர் மீது போலீசா
கைது


கேரளா, 28 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகரத்தின் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளம்பர பலகை அமைக்கப்பட்டு இருந்தது அந்த விளம்பர பலகையை

சேதப்படுத்தியதாக கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான வாலிபர் சங்கத்தினர் மீது

போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு அவர்களை கைது செய்வதற்காக போலீசார் தேடிச்

சென்றனர்.

அப்போது போலீசாரின் வாகனத்தை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர்

தடுத்து நிறுத்தி போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கு சவால் விடும்

வகையில் பேசியதோடு உதவி ஆய்வாளரையும் வாகனத்தையும் தாக்குவதற்கு

முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச்

சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு இருவரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீஸருடன் தகராறு செய்த

கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை

ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam