மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக பரப்புரை - அனுமதி கோரி கடிதம்
மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் சேலம் மற்றும் வேலூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், விரைவில் தஞ்சாவூர் செல்ல இர
TVK Vijay


மதுரை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் சேலம் மற்றும் வேலூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், விரைவில் தஞ்சாவூர் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

அதன்படி தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தஞ்சாவூரில் சந்திக்க உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் காலை 10 மணி முதல் 3 மணி வரை இந்த மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளதாகவும் எனவே இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்தி இன்று மாலை தகவல் தெரிவிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம், தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில்,கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, விஜயின் தஞ்சாவூர் பயணம் சுமார் 3 மாதங்கள் தாமதமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN