Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் சிங் என்பவர், ராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, இரும்பு திருடியதாக அப்பு என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவலர்கள் அப்புவை அருகிலுள்ள போலீஸ் பூத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
இந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் துரை என்பவர் போலீஸ் பூத்தில் வைக்கப்பட்டு இருந்த அப்புவை வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற காவலர் அருண் சிங்கை, அவர் தள்ளிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
அங்கு வந்த காவலர்கள் துரை, காவலர் அருண் சிங் ஆகியோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ