Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
தண்டவாள பராமரிப்பு வேலை நடப்பதால் சென்னை சென்ட்ரல் - கூடூர் பாதையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்ட்ரல் - கூடூர் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், இன்று மதியம் 12.50 மணி முதல் மாலை 6.50 மணி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் மெமு ரயில், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு ஆவடி செல்லும் பயணிகள் ரயில், சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரயில் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 2.30, 3.30 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் எளாவூர் - சூலூர்பேட்டை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில், சூலூர்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ஆகியவை சூலூர்பேட்டை - எளாவூர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM