ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 18,52,561 பேர் பயனடைந்தனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழ்நாடு, 28 பிப்ரவரி (ஹி ச.) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 1256 முகாம்கள் நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்த
மா. சுப்பிரமணியன்


தமிழ்நாடு, 28 பிப்ரவரி (ஹி ச.)

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 1256 முகாம்கள் நிறைவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் செயல்படுத்தும் திட்டங்களை அனைவரும் பாராட்டி வருவதாகவும்

அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர் என கூறிய அவர் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம்

2 கோடியே 80 லட்சம் பேர் பயனளிகளாக பலன் அடைந்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய திட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 388 வட்டங்களில் தலா 3 முகாம்கள் வீதம் 1,164 முகாம்கள், பெரு நகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தலா 1 முகாம் வீதம் 15 முகாம்கள்,

10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் (கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர்) தலா 4 முகாம்கள் வீதம் 20 முகாம்கள்,

10 லட்சத்திற்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 முகாம்கள் வீதம் 57 முகாம்கள் என 27.02.2026 நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் 63 வெவ்வேறு நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மகத்தான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 18,52,561 நபர்கள் (சராசரியாக ஒரு முகாமிற்கு 1475 நபர்கள் வீதம்) மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்துள்ளனர் என்றும் மிகப்பெரிய வெற்றியை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் பெற்றுள்ளதாகவும் 50,190 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, 60,682 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

3,55,584 தொழிலாளர் நலத்துறை பயனாளிகள், 2,78,739 அமைப்பு சாரா பணியாளர்கள் மற்றும் 96,352 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam