Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 28 பிப்ரவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரூர் வயல்காட்டு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாடானை போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த மூதாட்டி கையில் வைத்திருந்த ஒரு கட்டைப்பையில் துணிமணிகள், செல்போன், பணம் மற்றும் வீட்டுசாவி உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த மூதாட்டி திருவாடானை அருகே ஆதியாகுடி பகுதியைச் சேர்ந்த பாக்கியம் மனைவி தனம் (60) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இறந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டி ஒருவர் வயல்காட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN