சென்னையில் 152.45 கோடி மதிப்பில் 852 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை 3 வெவ்வேறு இடங்களில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச) தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 152.45 கோடி மதிப்பில் 852 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை 3 வெவ்வேறு இடங்களில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை புதுப்பேட்டை கொய
Udhay


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச)

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 152.45 கோடி மதிப்பில் 852 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை 3 வெவ்வேறு இடங்களில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு, பகுதியில்61 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில்,326 பரப்பளவில் இருந்த பழுதடைந்த பழைய வீடுகளை இடித்து 400 பரப்பளவில் கட்டப்பட்ட புதிய வீடுகளை 324 பயணாளிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் குடியிருப்பு,பகுதியில்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை 14கோடியே 20 லட்சம் மதிப்பில் 240 பரப்பளவில் இருந்த பழைய வீடுகளை இடித்து 400 பரப்பளவில் புதிய வீடுகளை 78 பயணாளிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை 77கோடியே05 லட்சம் மதிப்பில் 400 பரப்பளவில் 450 பயணாளிகளுக்கு புதிய வீடுகளை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை வசிக்கும் மக்களுக்கு கேஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணி சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் ரூபாய் 32.32 கோடி மதிப்பீடு கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் தாமோ அன்பரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ