Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை,வடபழனி சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் வெர்டிகள் கார்டன் அமைத்துக் கொண்டிருந்த போது,
80 கிலோ எடை கொண்ட இரும்பு விழுந்து பணியில் இருந்த ஊழியர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பகுதியை சேர்ந்த சாய்ராம் என்பவர்.குரோம்பேட்டையில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வந்தார்.
இவர்,கடந்த ஏழு ஆண்டுகளாக ரமேஷ் என்பவருடைய ஃபேப்ரிக்கேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தில் டிங்கர் மற்றும் பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வெர்டிகள் கார்டன் அமைப்பதற்காக பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி 80 கிலோ எடை கொண்ட இரும்பு பிரேம்களை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு பிரேமுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த நான்கு ப்ரேம்களும் சரிந்து சாய்ராம் மேல் விழுந்ததில் அவருடைய கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இடுப்பு பகுதிக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் போன நிலையில் அதே மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சாய்ராம் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ