Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்றுத் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , இன்று காலை எடப்பாடி பழனிசாமியை பசுமை
வழிச்சாலை இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
எங்களை ( அதிமுகவை ) விட்டு பன்னீர் செல்வம் போய்விட்டார். எனவே இப்போது அவருடைய ஆதரவாளர்களாக நாங்கள் இல்லை. இப்போதுதான் அவர் இந்தளவு கீழே சென்று விட்டார் என்று தெரிகிறது.
எம்ஜிஆர் , ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைத்து விட்டார். அவரால் சோர்வும் வருத்தமும்தான் ஏற்பட்டது.
கடந்த 27 ம் தேதி மாலை நான் ஓபிஎஸ்- சை பார்த்த வரை அவர் என்னிடம் திமுகவில் இணைய உள்ளது குறித்து எந்த தகவலும் சொல்லவில்லை.
நான். பின்னர் அலைபேசியில் அழைத்த பின்பும் ஓபிஎஸ் என் அழைப்பை ஏற்கவில்லை.
ஓபிஎஸ் அவசரமாக வர சொல்லி அழைத்ததால் நேற்று காலை சென்னை வந்தேன்.
அவசரமாக அழைத்தது ஏன் என்றேன்.. அதற்கு ஆதரவாளர்கள் சொன்ன தகவல் எனக்கு ஆச்சரியத்தை , மன கலக்கத்தை தந்தது.
ஓ.பன்னீர் செல்வத்திடம் , போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டு நான் அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டேன்.
நான் ஆரம்ப காலம் முதல் அதிமுகவில் இருந்தவன்.
ஓபிஎஸ் வுடன் 10 பேர் அமர்ந்த மேடையில் கடைசியில் நான் மட்டும்தான் எஞ்சியிருந்தேன்.
அமைதியாகவே இருப்பது ஓபிஎஸ்சுக்கு ஒரு கலை ,அதன் மூலமே சாதித்து விடலாம் என்று நினைப்பார். அவரோடு பயணித்தால் எங்களுக்கு இன்று ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.
ஓபிஎஸ் இணைவால் ஓபிஎஸ்சுக்கும் நட்டம் , திமுகவுக்கும் நட்டம். மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ