Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 28 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகள் அரசியல் கட்சிகளிடையே தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே வெடித்த மோதல் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில் பாமகவுக்கும் அதன் சின்னத்திற்கும் யார் உரிமையானவர் என்ற பிரச்சனை நீண்டு வருகிறது.
அன்புமணி தரப்பு பாமக, பாஜக - அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கி பெரியது என்ற சூழலில், ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b